Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 164:16:13
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • சூடானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்வது ஏன்?

    13/11/2025 Duração: 10min

    சூடானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, நிலைமை மிக மோசமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சூடானில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    13/11/2025 Duração: 06min

    இந்தியா, பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; காசா நிலவரம்; மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள்; G20 மாநாட்டை புறக்கணிக்கும் அமெரிக்கா; மலேசியா- தாய்லாந்து எல்லை அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு விபத்து; லிபியா குடியேறிகள் படகு விபத்து: 42 பேர் பலி; ஈராக் தேர்தல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியாவிலிருந்து விடைபெறுகிறது Menulog!

    13/11/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவில் தனது வணிகத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக Menulog அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • NSW மாநிலத்தில் ஒரு டாலருக்கு விற்கப்படும் வீடுகள்!

    13/11/2025 Duração: 02min

    நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கரைப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மலிவு விலையில் விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சைவ உணவு மட்டும் உண்ணுவதற்கும் மனச்சிதைவு நோய்க்கும் உள்ள தொடர்பு !!

    13/11/2025 Duração: 13min

    Schizophrenia ஒரு வகையான மனச்சிதைவு நோய் - இந்திய பின்னணி குறிப்பாக தமிழர்களுக்கு இந்நோய் தாக்குவதற்கு காரணி உள்ளதா? உள்ளது எனில் அந்நோய் ஏற்படுவதற்கான DNA மூலக்கூறுகள் என்ன? போன்று Schizophrenia குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம். இந்த ஆய்வில் தரவு ஆய்வாளராக (Data Analyst) பணிபுரியும் சதிஷ் பெரியசாமி அவர்கள் செல்வியுடன் இது குறித்து கலந்துரையாடுகிறார்.

  • செய்தியின் பின்னணி: விக்டோரியா மாநிலத்தில் குற்றமிழைக்கும் சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை?

    13/11/2025 Duração: 07min

    “Adult Time for Violent Crime” எனப்படும் புதிய சட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை பெரியவர்களுக்கான நீதிமன்றத்தில் விசாரித்து, தேவையானால் ஆயுள்த்தண்டனை (life imprisonment) வரை வழங்கும் வாய்ப்பு ஏற்படும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 13 நவம்பர் 2025 வியாழக்கிழமை

    13/11/2025 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 13/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • ஏன் மெல்பனிலிருந்து Cairnsக்கு குடிபெயர்ந்தேன்? Cairns சிறப்பானதா?

    12/11/2025 Duração: 04min

    SBS ஊடக அனுசரணையுடன் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரில் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் திஷான் அவர்களை சந்தித்தோம். இளைஞர்கள் பலரும் உள்ளூர் பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரும்போது, திஷான் அவர்கள் மெல்பனிலிருந்து பிராந்திய நகரமான Cairnsக்கு குடிபெயர்ந்து வாழ்ந்துவருகிறார். Cairns நகரில் அவரை நேரடியாக சந்தித்து அவரின் கதையைக் கேட்டறிந்தவர் றைசெல்.

  • ஐ. நா. மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவி பிள்ளை கூறுவது என்ன?

    12/11/2025 Duração: 06min

    ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் கௌரவம் மிக்க விருது சிட்னி அமைதி விருது - Sydney Peace Prize. 2025 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுக்கொண்டார் தமிழ் பின்னணி கொண்ட நவி பிள்ளை அவர்கள். தென்னாப்பிரிக்க நாட்டைச் சார்ந்த அவர், ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஆவார். SBS ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்முகம் இது.

  • விக்டோரியாவில் display home நீச்சல் குளத்தில் மூழ்கி இந்தியப் பின்னணிகொண்ட சிறுவன் மரணம்

    12/11/2025 Duração: 02min

    விக்டோரியா Shepparton அருகே display home நீச்சல் குளத்தில் மூழ்கி இந்திய பின்னணிகொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஃப்ளோரைடு பற்களை எப்படி பாதுகாக்கிறது?

    12/11/2025 Duração: 09min

    ஃப்ளோரைடு நமது பல் சுகாதாரத்திற்கு ஏன் முக்கியம்? எந்தெந்த வழிமுறைகளில் ஃப்ளோரைடை நாம் எடுத்துக்கொள்ள முடியும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் பல் மருத்துவராக பணிபுரியும் டாக்டர் மாலினி ராகவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • 'பார்வையில் புதுமை வாழ்க்கையில் இனிமை'- ஆன்மீக முகாம்

    12/11/2025 Duração: 06min

    பிரம்மகுமாரிகள் அமைப்பு நடத்தும் "பார்வையில் புதுமை வாழ்க்கையில் இனிமை" ஆன்மீக முகாம் நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதுதொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த ரஞ்சினி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • செய்தியின் பின்னணி: இதுவரை 1 மில்லியன் அகதிகளுக்கு விசா வழங்கியுள்ள ஆஸ்திரேலியா

    12/11/2025 Duração: 07min

    இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்ற இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Angelica Waite.

  • இன்றைய செய்திகள்: 12 நவம்பர் 2025 புதன்கிழமை

    12/11/2025 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 12/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: 2026 வரவு செலவு திட்டம் குறித்த பார்வை

    11/11/2025 Duração: 08min

    அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் தெரிவித்துள்ள கருத்துக்களோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Skilled Migration Program: ஆஸ்திரேலியாவின் எந்த மாநிலத்தில் குடியேற விண்ணப்பிக்கலாம்?

    11/11/2025 Duração: 03min

    Skilled Migration திட்டத்திற்கென ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஒதுக்கீடுகள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை

    11/11/2025 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 11/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • Road trips in Australia: What you need to know before hitting the road - ஆஸ்திரேலியாவில் நெடுந்தூர சாலைப்பயணங்களை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை

    10/11/2025 Duração: 08min

    There’s no better way to experience Australia than hitting the road. Between the wide-open landscapes, country bakery pies, and unexpected wildlife, a road trip lets you take in the country at your own pace. But even if you’ve driven overseas, Australia comes with its own set of challenges, especially when you venture off the beaten path. - ஆஸ்திரேலியாவில் நெடுந்தூர சாலைப்பயணங்களை மேற்கொள்வதற்கு நீங்கள் எவ்வாறு தயாராகி, பாதுகாப்பாக இருந்து உங்கள் பயணத்தை சிறப்பாக அனுபவிக்கலாம் என்பது குறித்து Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • துரிதமாக செய்துகொள்ளக்கூடிய இட்லி செய்முறை!

    10/11/2025 Duração: 08min

    உணவு சமைப்பதற்கு போதிய நேரம் இல்லாதபோது துரிதமாக செய்துகொள்ளக்கூடிய இட்லி செய்முறை ஒன்றை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி : ஊதியம் வழங்கும் போதே இனி சூப்பர் — புதிய Payday Super சட்டம்!

    10/11/2025 Duração: 06min

    2026 ஜூலை முதல், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நேரத்திலேயே அவர்களது super தொகையும் செலுத்தப்பட வலியுறுத்தும் “Payday Superannuation” சட்டமுன்வடிவு பெடரல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

página 5 de 65