Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
$1200 அபராதம் வரக்கூடிய சீட் பெல்ட் தவறு – பலர் அறியாமலே செய்யும் குற்றம்!
27/11/2025 Duração: 03minஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் பிரதேசங்களிலும் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது சீட் பெல்ட்டை கைகளுக்கு கீழே வயிறு பகுதியில் அணிந்திருந்தால் அபராதம் விதிக்கபடும். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இந்து சமயக் கூறுகளோடு ஆறுதல் கூறும் ஜெயந்தி
27/11/2025 Duração: 09minசிட்னி மருத்துவமனைகளில் இந்து சமய பிராத்தனையாளராக பணிபுரியும் ஜெயந்தி ரமணன், தனது பணி குறித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
-
ஒட்டகம்: அழைத்து வந்த விருந்தாளியை பகையாளியாக்கிய ஆஸ்திரேலியா!
27/11/2025 Duração: 09minஒட்டகம் ஆஸ்திரேலிய மண் சார்ந்த விலங்கு அல்ல. ஒட்டகம் தாவரங்களை அழிக்கிறது, தண்ணீரை குடிக்கிறது என்பதால் ஒட்டகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இந்த நாட்டுக்குள் ஒட்டகம் எப்படி வந்தது, விருந்தாளியாக அழைத்துவரப்பட்ட ஒட்டகத்தை ஆஸ்திரேலியா எப்படி பகையாளியாக்கியது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி: அதிக வாடகைச் செலவு – பெர்த் நகரம் தொடர்ந்தும் முன்னிலை
27/11/2025 Duração: 08minமேற்குத் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் நாட்டின் மிக அதிகமாக வீட்டு வாடகைக்கு செலவாகும் தலைநகரம் என்ற நிலையை தக்க வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 27 நவம்பர் 2025 வியாழக்கிழமை
27/11/2025 Duração: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
விசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நாடுகடத்தும் திட்டத்தை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம்
26/11/2025 Duração: 02minவிசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நவுருவுக்கு அனுப்பும் திட்டத்தை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
MiniPod: Call it a day | Words we use - MiniPod: Call it a day | Words we use
26/11/2025 Duração: 04minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'call it a day'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது ‘call it a day’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
-
Obesity: Causes, Effects and Prevention - உடற்பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்
26/11/2025 Duração: 13minObesity is one of the major health issues affecting many people in our community. The causes of obesity, its impact on health, and ways to overcome it are explained in a simple and easy-to-understand manner by General Physician Dr Thiyagarajah Srikaran. The interview is conducted by Praba Maheswaran. - நமது சமூகத்தில் பலரையும் பாதிக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கதொன்று உடற் பருமன் ஆகும். உடற் பருமனுக்கான காரணங்கள், உடல்நல பாதிப்புகள் மற்றும் இதிலிருந்து மீள என்ன செய்யலாம் என்பதை எளிய முறையில் விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர்(GP) Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க ஒப்புதல்!
26/11/2025 Duração: 06minஆஸ்திரேலியாவின் உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 26 நவம்பர் 2025 புதன்கிழமை
26/11/2025 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: புதிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் முதல் மிகப்பெரிய போராட்டம்
25/11/2025 Duração: 08min"மாபெரும் மக்கள் குரல்" என்ற தொனிப்பொருளில் அரசுக்கு எதிரான பேரணி ஒன்று கூட்டு எதிர்க்கட்சியால் நடாத்தப்பட்டது. இது அரசை சீர்குலைக்கும் முயற்சி என ஆளுந்தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினாினதும் கருத்துக்களோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு: நீங்களே பரிசோதனை செய்யலாம்!
25/11/2025 Duração: 09minநவம்பர் 17 முதல் 23ஆம் தேதி வரை Cervical screening கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும்பரிசோதனை குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும் பரிசோதனை குறித்த விரிவான விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான விசா: விண்ணப்பிப்பது எப்படி?
25/11/2025 Duração: 10minஇந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் MATES - Mobility Arrangement for Talented Early professionals Schemeஇன் அடுத்த கட்டம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 25 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
25/11/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
விமானப் பயணத்தில் பவர் பேங்க் பயன்படுத்த தடை வருகிறது
24/11/2025 Duração: 03minவிமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் குரலில் அவரது கவிதை!
24/11/2025 Duração: 03minதமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். "பாரதியாருக்குப்பின் யாருடைய கவிதைகளையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழன்பன் போன்றோர் நல்ல கவிதைகளைப் படைக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கவிதை வளர்ந்துகொண்டுதான் உள்ளது, நாம்தான் இத்தனை காலம் அவற்றை படிக்காமல் விட்டுவிட்டோம் என்று கவலைப்பட்டேன்" என்று தமிழின் மூத்த இலக்கியவாதி ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக கவிதை உலகில் தனி முத்திரை பதித்த ஈரோடு தமிழன்பன் அவர்களது கவிதைகளில் ஒன்றை அவரது குரலியே செவிமடுப்போம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கிய நேர்முகம்!
24/11/2025 Duração: 20minதமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ எனும் கவிதை நூலுக்காக 2004ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோது SBS தமிழ் அவரை நேர்கண்டிருந்தது. அந்த நேர்முகத்தின் மறுபதிவு இது. அவரோடு உரையாடியவர் றைசல்.
-
-
செய்தியின் பின்னணி : சிங்கப்பூரின் புதிய SAF வரி விமான கட்டணத்தை உயர்த்துமா?
24/11/2025 Duração: 07minசிங்கப்பூர் அரசு உலகில் முதன்முறையாக ‘Sustainable Aviation Fuel Levy’ SAF என்ற புதிய வரியை அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் இருவரும் கரியமில உமிழ்வு இல்லாத பசுமையான விமான எரிபொருளின் செலவை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த SAF வரி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
24/11/2025 Duração: 09minஇந்தியா முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் அமல்; தமிழக சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை!; காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ”மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!