Sbs Tamil - Sbs
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் குரலில் அவரது கவிதை!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:03:31
- Mais informações
Informações:
Sinopse
தமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். "பாரதியாருக்குப்பின் யாருடைய கவிதைகளையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழன்பன் போன்றோர் நல்ல கவிதைகளைப் படைக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கவிதை வளர்ந்துகொண்டுதான் உள்ளது, நாம்தான் இத்தனை காலம் அவற்றை படிக்காமல் விட்டுவிட்டோம் என்று கவலைப்பட்டேன்" என்று தமிழின் மூத்த இலக்கியவாதி ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக கவிதை உலகில் தனி முத்திரை பதித்த ஈரோடு தமிழன்பன் அவர்களது கவிதைகளில் ஒன்றை அவரது குரலியே செவிமடுப்போம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.