Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
இன்றைய செய்திகள்: 24 நவம்பர் 2025 - திங்கட்கிழமை
24/11/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
22/11/2025 Duração: 08minநாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (16 – 22 நவம்பர் 2025)
21/11/2025 Duração: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (16 – 22 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
-
‘Everyone wants to matter’: How we can prevent hate and division in our neighbourhoods - அயலவர்களுடன் வெறுப்பும் பாகுபாடும் உருவாகாமல் தடுக்க என்ன செய்யலாம்?
21/11/2025 Duração: 06minOur social cohesion is under threat. But building stronger community ties can help grow connection, trust and shared belonging. - நமது சமூக ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் வலுவான சமூக இணைப்புகளை உருவாக்குவது தொடர்பு, நம்பிக்கை மற்றும் பகிரும் உணர்வை வளர்க்க உதவும்.
-
செய்தியின் பின்னணி: ஆஷஸ், காலத்தை கடந்து நிற்கும் கிரிக்கெட்டின் மரபுக் கதை
21/11/2025 Duração: 08min“ஆஷஸ் (The Ashes)” என்பது கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் நடைபெறும் இப்போட்டியின் 74வது தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
‘தமிழர் தேசிய இனம் என்பதை ஏற்காதவர்களோடு இணைந்து செயல்பட நான் தயாரில்லை’ - மாத்தளை சோமு
21/11/2025 Duração: 08minமாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 3
-
இன்றைய செய்திகள்: 21 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
21/11/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
‘விருது தந்தால் வாங்குவேன்; விருதைத்தேடி போவதில்லை’ - மாத்தளை சோமு
21/11/2025 Duração: 13minமாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
20/11/2025 Duração: 08minஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிபர் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு மற்றும் வடக்கு , கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் ஆதரவளிப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளுந்தரப்பு மறுப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி”நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
20/11/2025 Duração: 08minஉக்ரைனில் போர் நிறுத்தம்? அமெரிக்கா, ரஷ்யாவின் புதிய திட்டம்; காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; சூடானில் உள்நாட்டு யுத்தம்: முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் அறிவிப்பு; பிரேசிலில் COP30 மாநாடு; DR காங்கோவில் சுரங்க விபத்து: 32 பேர் பலி; நைஜீரியாவில் 25 பெண் குழந்தைகள் கடத்தல்; ஆப்பிரிக்காவில் மோசமான பாதுகாப்பு சூழ்நிலை: ஐ.நா. எச்சரிக்கை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
‘வரலாறு தெரியாத சமூகமாக தமிழ் மக்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ – மாத்தளை சோமு
20/11/2025 Duração: 15minமாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1
-
நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா?
20/11/2025 Duração: 14minஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப அரசு படகுகள் வாங்குகிறதா?
20/11/2025 Duração: 07minஅண்மையில், Broome நகரத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு Australian Border Force (ABF) கப்பலில், மாற்றியமைக்கப்பட்ட நான்கு மீன்பிடிப் படகுகள் இருந்தன. இதன்மூலம், நாடு முழுவதும் மீன்பிடிப் படகுகளை வாங்கி மாற்றும் காமன்வெல்த் அரசு திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
அமெரிக்க அரசியலை பரபரப்பாக்கியிருக்கும் Epstein Files - பின்னணி என்ன?
20/11/2025 Duração: 09minஅமெரிக்காவில் Epstein files விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் Donald Trumpஐ தொடர்புபடுத்தி பேசப்படும் Epstein Files என்றால் என்ன, அதன் பின்னணி என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
சிட்னியில் 12 ஆவது சர்வதேச வர்த்தக மாநாடு!
20/11/2025 Duração: 07minஉலக தமிழ் வர்த்தக சபையும் (World Tamil Chamber of Commerce), Greater Cumberland Chamber of Commerce அமைப்பும் இணைந்து 12வது ஆண்டு சர்வதேச வர்த்தக மாநாட்டை சிட்னி நகரில் நடத்துகின்றன. இந்திய அரசு மற்றும் Invest NSW ஆதரவுடன் டிசம்பர் 6 & 7 ஆகிய நாட்களில் Blacktown Leisure Centre, Stanhopeயில் நடைபெறும் இம்மாநாடு குறித்து விளக்குகிறார் Greater Cumberland Chamber of Commerceயின் தலைவர் இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
ஆண்களைப் பாதிக்கும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளும் தீர்வுகளும்
20/11/2025 Duração: 15minசர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆண்கள் தமது உடல்நலனில் மாத்திரமல்லாமல் மனநலனிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதற்கான உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார் மெல்பனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2025 வியாழக்கிழமை
20/11/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 20/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
‘அதிகாரம் என்பது ஆணுக்கு ஒரு போதை, பெண்ணுக்கு அது வலிமை’ – சல்மா
19/11/2025 Duração: 25minராஜாத்தி சல்மா, தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் இந்தியர் மீது இனவெறித்தாக்குதல்? NSW அரசு கவலை!
19/11/2025 Duração: 02minParramatta Westfield Shopping மையத்தில் இந்தியப் பின்னணிகொண்ட ஒருவர் இனவெறித் தாக்குதலை எதிர்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
MiniPod: Piece of cake | Words we use - MiniPod: Piece of cake | Words we use
19/11/2025 Duração: 04minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'a piece of cake' - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது ‘a piece of cake’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.