Cochrane Library: Podcasts ()

Informações:

Sinopse

. . .

Episódios

  • தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் டெலிரியத்தை தடுக்கும் சிகிச்சைகள்

    03/10/2016 Duração: 05min

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்- லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் மனக்குழப்ப நிலை, அதாவது டெலிரியம் உருவாகக் கூடும். இது மோசமான மருத்துவ விளைவுகள், மருத்துவமனையில் நீடித்த தங்கல்கள், மற்றும் அதிகரித்த ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுக்கு வழி வகுக்க கூடிய ஒரு கடுமையான மற்றும் துயரமான நோய் நிலையாகும். ஆதலால், இதனை தடுக்கும் திறன்மிக்க வழிகளை கண்டறிவது முக்கியமாகும். இதற்கான பலதரப்பட்ட சிகிச்சை தலையீடுகளை மார்ச் 2016-ல் மேம்படுத்தப்பட்ட ஒரு காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது. யுகே-விலுள்ள யார்க் பல்கலைக்கழகத்திலிருந்து நஜ்மா சித்திக் என்பவரால் வழி நடத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வின் முக்கிய முடிவுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • கர்ப்பக் கால மிகை வாந்திக்கான சிகிச்சைகள்

    31/08/2016 Duração: 04min

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.அநேக கர்ப்பிணி பெண்கள், காலை நேர குமட்டலை ஓரளவு அனுபவித்திருப்பர், ஆனால் சிலருக்கோ வாந்தியும் குமட்டலும் மிக அதிகமாக இருக்கும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகள் மீதான ஒரு காக்ரேன் திறனாய்வை அமெரிக்காவிலுள்ள பிலடெலிபியாவின் தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து ரூப்சா போலிக் என்பவர் மே 2016-ல் நடத்தினார். அதன் முக்கிய முடிவுகள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.

  • குழந்தை பெற்ற பெண்களுக்கான வைட்டமின் A உபச்சத்து

    11/08/2016 Duração: 03min

    குழந்தைப் பிறப்பிற்கு பின் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் A உபச்சத்தின் மீதான புதுப்பிக்கப்பட்ட திறனாய்வை, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மார்ச் 2016ல் மேற்கொண்டனர். அதின் முக்கிய முடிவுகள் இங்கே வழங்கப்படுகிறது.இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.    குழந்தைப் பிறப்பிற்கு பின் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் A உபச்சத்தின் மீதான புதுப்பிக்கப்பட்ட திறனாய்வை, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மார்ச் 2016ல் மேற்கொண்டனர். அதின் முக்கிய முடிவுகள் இங்கே வழங்கப்படுகிறது.

  • வேலையின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான பணியிட சிகிச்சை தலையீடுகள்

    11/08/2016 Duração: 04min

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.அநேக மக்கள் தங்களின் உடலியக்கத்தை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெற கூடும்.அதற்கு ஒரு வழி, வேலை நேரத்தின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகளின் மீதான ஆதாரத்தை ஜனவரி 2015ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு சோதித்தது. இந்த திறனாய்வில் புதிய ஆய்வுகள் இணைக்கப்பட்டு மார்ச் 2016ல் புதுப்பிக்கப்பட்டது.

  • முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகள்

    08/08/2016 Duração: 04min

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.குறைந்த மற்றும் நடுத்தர-வருவாய் நாடுகளில் உள்ள பராமரிப்பு அமைப்புகளின் மிக முக்கியமான சவால்களில் ஒன்று கர்ப்பிணி பெண்களுக்கான முன் பேறுகால பராமரிப்பை மேம்படுத்துவதாகும். டிசம்பர் 2015-ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு, அத்தகைய பராமரிப்பு அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகளின் ஆதாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறது.

  • வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான பராமரிப்பு வழங்கல் மற்றும் சுய-பராமரிப்பு யுக்திகள்

    22/07/2016 Duração: 03min

    உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை வலிப்பு நோய் தாக்குகிறது. அநேக சோதனைகள் மற்றும் மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளின் மீதான திறனாய்வுகள் போக, அதிக சிக்கலான யுக்திகளை சோதித்த ஆய்வுகளும் உள்ளன. பிப்ரவரி 2016ல் ஒரு மேம்படுத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வில், யுகே பப்ளிக் ஹெல்த் வேல்ஸ்-விலிருந்து பீட்டர் ப்ராட்லி மற்றும் அவர் உடன் பணியாளர்கள் இவற்றின் மீதான ஆதாரத்தை கண்டனர். அவற்றை இந்த வலையொலியில் உங்களுக்கு வழங்குகிறோம்.இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து,  ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

  • ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களுக்கு அவர்களின் மருத்துவ ஆராய்ச்சிகளில் மக்களை சேர்ப்பதற்கு எந்த வழிகள் உதவக் கூடும்?

    14/07/2016 Duração: 04min

    ஆரோக்கிய பராமரிப்பின் விளைவுகள் மீதான ஆயிரக்கணக்கான காக்ரேன் திறனாய்வுகள் போக, ஆராய்ச்சி நடத்துவது தொடர்பான ஆதாரத்தை இருபத்தி நான்கு காக்ரேன் செயல்முறையியல் திறனாய்வுகள் மதிப்பிடுகிறது. இங்கிலாந்திலுள்ள லான்காஸ்டெர் பல்கலைக் கழகத்தில் இருந்து நான்ஸி பிரஸ்டன், அவரின் பிப்ரவரி 2016 திறனாய்வில் ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு மக்களை சேர்ப்பதற்கான வழிகளை விவரிக்கிறார்.இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழி பெயர்த்து,  ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

  • குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் கட்டியல்லாத இழைம பெருக்க மூச்சு குழாய் தளர்ச்சி நோய்க்கு  (நான்-சிஸ்டிக் பைரோசிஸ் பிரான்க்யக்டேசிஸ்) நோய்க்கு நீடித்த நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை

    19/04/2016 Duração: 03min

    ஒரு பரந்த அளவிலான நுரையீரல் பிரச்னைகளுக்கு காக்ரேன் ஏர்வேஸ் குழு இப்போது 300-க்கும் அதிகமான முழு திறனாய்வுகளை தயாரித்துள்ளது. அவற்றில் ஒன்று, பிரான்க்யக்டேசிஸ் ஆகும் மற்றும் ஆகஸ்ட் 2015-லிருந்து ஒரு புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு நீண்ட-கால நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சையின் விளைவுகளை ஆராய்கிறது. அதன் கண்டுப்பிடிப்புகளை, ஆஸ்திரேலியாவின் அடெலைட்லிலுள்ள ப்ளிண்டேர்ஸ் யுனிவெர்சிட்டிலிருந்து கின் ஹின் இந்த ஆதார வலையொலியில் தொகுத்துள்ளார்.இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா.

  • செகண்ட் ஹான்ட் ஸ்மோக்கிற்கு வெளிப்படுதல், புகை பரவியிருக்கும் பகுதி, மற்றும் புகையிலை உட்கொள்ளலால் ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்கு புகைப்பதற்கான  தடை சட்டங்கள்

    04/04/2016 Duração: 07min

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.  அநேக நாடுகளில்,  சமீபத்திய வருடங்களில் மிகவும் கவனிக்கத்தகுந்த பொது நலவாழ்வு நடவடிக்கைகளில் ஒன்று, உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததாகும் . இந்த தடைகளின் ஆரோக்கிய விளைவுகளை ஒரு காக்ரேன் திறனாய்வு ஆராய்கிறது மற்றும் அது பெப்ரவரி 2016-ல் புதுப்பிக்கப்பட்டது. இத்தகைய தேசியளவு தடைகளில் ஒன்றை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளின் யுனிவெர்சிட்டி காலேஜ்லிருந்து கேட் பிரேசர், இதன் மீதான ஆதார அடிப்படை விரிவாக்கத்தை மற்றும் சமீபத்திய கண்டுப்பிடிப்புகளை பற்றி கூறுகிறார்.

  • நியூட்ரோபில் குறைவு அல்லாத நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை தடுப்பதற்கான பூஞ்சை நீக்கி முகமை பொருள்கள்

    01/04/2016 Duração: 04min

    இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன். நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில், இறப்பிற்கும் மற்றும் நோயுற்ற நிலைக்கும், துளைக்கக் கூடிய பூஞ்சை தொற்றுகள் முக்கிய காரணங்களாகும். இவற்றை தடுப்பதற்கு பூஞ்சை நீக்கி முகமை பொருள்களின் விளைவுகளை பற்றி ஜனவரி 2016-ல் வெளியான ஒரு புதுப்பிக்கப்பட்ட காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது.

  • உணவுக் குழாய், வயிறு, கல்லீரல், மற்றும் கணையத்தின் பெரும் அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகும் மக்களில் மேம்பட்ட மீட்சி நெறிமுறைகள்

    30/03/2016 Duração: 03min

    இங்கிலாந்திலுள்ள National Institute for Health Research-ஆல் நிதியளிக்கப்பட்ட ஒரு திறனாய்வு திட்டத்தின் பகுதியாக பெப்ரவரி 2016-ல் தயாரிக்கப்பட்ட  ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு, பெரும் மேல் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சைக்கு மேம்பட்ட மீட்சி நெறிமுறைகளின் மேலான ஆதாரத்தை ஆராய்ந்தது.

  • ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு

    01/03/2016 Duração: 04min

    காக்ரேன் மஸ்குலோஸ்கேலிடல் குழு, ஃபைப்ரோமியால்ஜியா  என்ற ஒரு வலிமிகுந்த நிலைமையை கொண்டிருக்கும் மக்களுக்கான உடற்பயிற்சி திட்டங்களின் மீது ஒரு தொடர்ச்சியான திறனாய்வுகளை தயாரிக்கின்றன. அவற்றில் மிக சமீபமானது அக்டோபர் 2014-ல் வெளியிடப்பட்டது மற்றும் இது நீர்-சார்ந்த உடற்பயிற்சியின் ஆதாரத்தை ஆய்வு செய்தது. இந்த ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான உடற்பயிற்சியின் திறனாய்வு குழுவிலிருந்து தெரேசா ரோஸ், இந்த நிலைமை மற்றும் இந்த சிகிச்சை வகையையும் பற்றி இந்த ஆதார வலையொலியில் நமக்கு விளக்குகிறார். 

  • கர்ப்பிணி பெண்களுக்கான வைட்டமின் டி உபச்சத்து

    01/03/2016 Duração: 04min

    அநேக கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் டி குறைபாட்டினை கொண்டிருப்பர், மற்றும் இதை சமன் செய்ய வாய் வழியான உபச்சத்துகளை எடுத்துக்கொள்வதை கருத்தில் கொள்வர். யுனிவெர்சிட்டி ஆப் போர்டோ ரிக்கோ-விலிருந்து கிறிஸ்டினா பாலியோஸ் மற்றும் அவர் உடன் பணியாளர்கள் ஜனவரி 2016-ல் அவர்களுடைய ஆதாரத்தின் காக்ரேன் திறனாய்வை புதுப்பித்தனர். அவர் இந்த ஆதார வலையொலியில் இது பற்றி மேலும் விளக்குகிறார்:

  • பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சிக்கான சிகிச்சை தலையீடுகள்

    01/03/2016 Duração: 04min

    பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சி என்பது பக்கவாதத்திலிருந்து பிழைத்த மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானவர்களைக் பாதிக்கும் ஒரு பொதுவான மற்றும் கடுமையான பிரச்னையாகும். பிற அறிகுறிகள் மறைந்த பிறகும், அது பெரும்பாலும் சில காலத்திற்கு தொடர்ந்து நீடிக்கும். அயர்ச்சியானது, நோயாளியுடைய அன்றாட நடவடிக்கைகளில் பங்கு பெறுவதை தடை செய்யும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தின் மேல் எதிர்மறையான தாக்கங்களை கொண்டிருக்கும். எனினும், இதற்கான சிகிச்சையை பற்றி தெரிவிக்க நீண்ட காலமாக, எந்த ஒரு ஆதாரமும் இருந்ததில்லை. 2009-ல் வெளியான எங்களுடைய காக்ரேன் திறனாய்வின் முந்தைய பதிப்பு மூன்றே சோதனைகளை உள்ளடக்கி இருந்தது, அவற்றில் எதுவும்  பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சிக்காக குறிப்பிட்டு வடிவமைக்கப்படவில்லை. எனினும், கடந்த பத்து வருடக்  காலத்தில், அதிகமான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த தலைப்பில் ஆர்வம் கொண்டவர்களாக ஆகி உள்ளனர்  மற்றும் பல்வேறு புதிய சிகிச்சை தலையீடுகள் சோதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிகிறோம். ஆதலால், சில புதிய ஆதாரத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த புதுப்பித்தலை நாங்கள் நடத்தினோம்,  மற்றும் இதை எங்

  • வயது வந்தவர்களில் உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கான முழு-உடல் குளிர் சிகிச்சை (உச்சஅளவு குளிர் காற்றை படவைத்தல்)

    17/02/2016 Duração: 07min

    உடற்பயிற்சிக்குரிய பயன்கள் ஒரு பக்கம் இருக்க, அதின் வரவேற்கப்படாத விளைவுகளில் ஒன்று தசை நோவாக இருக்கும், ஆதலால் இதனை தடுப்பதற்கு அல்லது சிகிச்சை அளிப்பதற்குரிய வழிகள் தொழில் முறை அல்லது தொழில் முறை சாராத தடகள வீரர்களுக்கு  மிகவும் முக்கியமானதாக இருக்கக் கூடும். செப்டம்பர் 2015-ல் ரக்பி உலக கோப்பை போட்டி தொடங்கிய போது, முழு-உடல் குளிர் சிகிச்சை அல்லது உச்ச அளவு குளிர் காற்றை படவைத்தல் என்ற ஒரு சிகிச்சை தலையீட்டின் ஆதாரத்தை ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது. யுகே-வில் உள்ள யுனிவெர்சிட்டி ஆப் போர்ட்ஸ்மௌத்-திலிருந்து, இந்த திறனாய்வு ஆசிரியர்களில் ஒருவரான  ஜோசப் கோஸ்டெல்லோ, இது பற்றி மேலும் கூறுகிறார். 

  • நீண்ட-கால மருத்துவ நிலைமைகள் கொண்ட வயது வந்தவர்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் மீதான காக்ரேன் திறனாய்வு

    09/02/2016 Duração: 03min

    மக்கள்தொகை முதுமையடையும் போது, நாள்பட்ட மருத்துவ  நிலைமைகள் கொண்ட மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.  யு கே யுனிவெர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட், Nuffield Department of Population Health -லிருந்து ஏஞ்சலா கோல்டர் மற்றும் அவர் உடன் பணியாளர்கள், தங்களுடைய  சொந்த ஆரோக்கிய பராமரிப்பில் அதிகமாக கருத்து கூறுவதற்கு உள்ள அத்தகைய நோயாளிகளுக்கு உதவும் வழிகளை கண்டனர்.  மார்ச் 2015-ல் வெளியான அவர்களின் காக்ரேன் திறனாய்விலிருந்த முடிவுகளை  பற்றி இந்த ஆதார வலையொலியில் நமக்கு கூறுகிறார்.

  • ஏடிஎச்டி-ற்கான மெத்தில்பெனிடேட்

    03/02/2016 Duração: 04min

    அட்டென்ஷன் டெபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் அல்லது ஏடிஎச்டி என்பது குழந்தைப்பருவ உளநல பிரச்னைகளில் மிக பொதுவான ஒன்றாகும். இதற்கு சிகிச்சையளிக்க, மெத்தில்பெனிடேட் என்ற ஒரு மருந்து மிக பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகளைப் பற்றி காக்ரேன் திறனாய்வாளர்கள் ஒரு மிக விரிவான ஆதார திறனாய்வை நவம்பர் 2015-ல் வெளியிட்டனர்; டென்மார்க், ரீஜன் சிலாந்து சைக்கியாட்ரிக் ரிசர்ச் யூனிட்டிலிருந்து, இந்த திறனாய்வின் முதன்மை ஆசிரியர் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் ஓலே ஜேக்கப் ஸ்டோர்போ, இந்த திறனாய்வில் அவர்கள் கண்டது என்ன என்பது பற்றி நமக்கு இங்கு கூறுகிறார்

  • நாள்பட்ட அயர்ச்சி நோய் தொகுப்பு கொண்ட நோயாளிகளுக்கான உடற்பயிற்சி சிகிச்சை

    03/02/2016 Duração: 03min

    உடற்பயிற்சியின் விளைவுகள் பற்றி அநேக காக்ரேன் திறனாய்வுகள் உள்ளன, மற்றும் நாள்பட்ட அயர்ச்சி நோய் தொகுப்பிற்கானது பெப்ரவரி 2016-ல் புதுப்பிக்கப்பட்டது. ஜின் வில்லியம்ஸ் இந்த திறனாய்வு மற்றும் அதனுடைய புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை  பற்றி இங்கு விளக்குகிறார் 

  • மாதவிடாய் வலிக்கான ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி நீக்கி மருந்துகள்

    03/02/2016 Duração: 04min

    டிஸ்மெனொரியா அல்லது மாதவிடாய் வலி என்பது பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான மருத்துவ பிரச்னைகளில் ஒன்றாகும், இதற்கான பல்வேறு விதமான சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை பற்றி காக்ரேன் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைந்த கருவுறுதல் திறன் ஆராய்ச்சி குழுவின் அதிகமான திறனாய்வுகளை ஆராய்ந்துள்ளது. ஜூலை 2015-ல் வெளியான ஒரு புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு,  ஸ்டீராய்ட் அல்லாத  அழற்சி நீக்கி மருந்துகள் குறித்த ஆதாரத்தை திறனாய்வு செய்தது. நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் இருந்து, இந்த திறனாய்வு ஆசிரியர்களில் ஒருவரும் மற்றும் இந்த குழுவின் ஒருங்கிணைந்த பதிப்பாளருமான சிண்டி பார்குவார் இந்த திறனாய்வில் கண்டதை பற்றி இங்கு கூறுகிறார்

  • ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களில் தொழில்சார் மன அழுத்தத்தை தடுத்தல்

    11/01/2016 Duração: 05min

    ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள், நோயாளிகளுக்கு உதவ என்ன செய்ய முடியும் என்பதை காண்பதோடு, அதே ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் எந்த வழிகளில் தங்களுக்கு தாங்களே உதவிக் கொள்ளலாம்  என்பதற்கான திறனாய்வுகளையும் காக்குரேன்  நூலகம் கொண்டுள்ளது.  பினிஷ் ஆரோக்கிய  தொழில்சார்  நிலையத்திலிருந்து யானி ரோட்சலைனின் அவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு குழு, தொழில்சார்ந்த மன அழுத்தத்தை தடுப்பதைக் கண்ட அத்தகைய ஓர் திறனாய்வை  நடத்தியது,  இந்த திறனாய்வு  டிசம்பர்  2014-ல் புதுப்பிக்கப்பட்டது.

página 1 de 2