Sbs Tamil - Sbs

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • Skilled Migration: என்னென்ன வேலைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கவுள்ளது?

    04/06/2024 Duração: 03min

    ஆஸ்திரேலியாவில் என்னென்ன வேலைகளுக்கான விசாக்களுக்கு அரசு முன்னுரிமையளித்து அதை விரைவாகப் பரிசீலிக்கும் என்ற முன்வரைபுப் பட்டியலை Jobs and Skills Australia வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய குடியுரிமையை விரைவாகப் பெற புதிய வழியைத் திறக்கும் இராணுவம்

    04/06/2024 Duração: 02min

    ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் இணையும் வெளிநாட்டவர்கள் விரைவாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்ள வழிசெய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு தகுதிபெறுவதற்கு சில முன் நிபந்தனைகளை பூர்த்திசெய்ய வேண்டும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • விக்டோரியாவில் சிறைக் காவலர்கள் ஊதிய உயர்வு வேண்டி வேலை நிறுத்தப் போராட்டம்

    04/06/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/06/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு!

    03/06/2024 Duração: 02min

    ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.75 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 93 வயதில் 5வது திருமணம் செய்துகொண்டார் ஆஸ்திரேலிய செல்வந்தர் Murdoch

    03/06/2024 Duração: 02min

    உலக ஊடகச் சக்கரவர்த்தியான ஆஸ்திரேலியாவின் Rupert Murdoch தனது 93வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Dancer from Singapore to Delight Sydney - சிங்கப்பூரிலிருந்து சிட்னியைப் பரவசத்திலாழ்த்த வரும் நாட்டியக் கலைஞர்

    03/06/2024 Duração: 07min

    An Interview with Mohanapriyan Thavarajah, Associate Creative Director of Apsaras Dance Company, about his upcoming performance at the Swara-Laya Fine Arts Institute's annual music festival in Sydney with Kulasegaram Sanchayan. - ஸ்வர-லயா நுண்கலைக் கழகம் சிட்னியில் நடத்தும் வருடாந்த இசை விழா குறித்தும், அதில் தனது நிகழ்ச்சி குறித்தும், சிங்கப்பூரில் இயங்கும் நடன நிறுவனமான Apsaras Dance Companyயின் இணை கலை இயக்குநர் மோகனப்ரியன் தவராஜா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Big Cars, Bad Drivers: Why Are More Australians Dying on the Road? - பெரிய கார்களா, மோசமான ஓட்டுநர்களா - ஆஸ்திரேலியர்கள் அதிகமாக சாலையில் கொல்லப்படுவது ஏன்?

    03/06/2024 Duração: 07min

    Statistics indicate that Australians are purchasing larger vehicles than ever before. Concurrently, the number of fatalities from road accidents has surged to an all-time high. Kulasegaram Sanchayan explores the background of this alarming trend. - அண்மைக் காலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரிய வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் வாங்குகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் மரணிப்பவர்கள் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    03/06/2024 Duração: 08min

    இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி அமோக வெற்றி, தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிந்தைய க கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி மற்றும் கன்னியாகுமரியில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் 3 நாள் தியானம்போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • சிட்னி வீடொன்றில் விபத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய பெண்ணின் உடல் மீட்பு

    03/06/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/06/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • கலைஞர் 100: கலைப் பயணம்!

    02/06/2024 Duração: 11min

    தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் கலைப் பயணம் குறித்த விவரணத்தை படைக்கிறார் ஊடகத்துறையில் பொன்விழா காணும் ச.சுந்தரதாஸ் அவர்கள். குரல் கொடுத்தவர்கள்: காந்திமதி தினகரன், வர்சினி கேதீஸ்வரன் & அகலவன் ஸ்ரீ. நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 1.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    01/06/2024 Duração: 03min

    இந்த வார முக்கிய செய்திகள்: 1 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • குடிவரவு தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோரைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு

    31/05/2024 Duração: 02min

    நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 151 பேரைக் கண்காணிக்க ட்ரோன்கள்- சிறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Australia’s coffee culture explained - ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் coffee வகைகள் தொடர்பில் அறிந்திருக்கிறீர்களா?

    31/05/2024 Duração: 07min

    Australians are coffee-obsessed, so much so that Melbourne is often referred to as the coffee capital of the world. Getting your coffee order right is serious business, so let’s get you ordering coffee like a connoisseur. - ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று காபி/Coffee. இங்குள்ள முக்கால்வாசி பேர் தினமும் காபி குடிக்கிறார்கள் என்பதுடன் இது ஒரு கலை வடிவமாகவும் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் பல விதமான காபி தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    31/05/2024 Duração: 08min

    அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் யோசனைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்துவரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் பொதுவிவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Interview with A.P. Sridhar, Museum Man of India – Part 1 - Museum of Lisa – மோனோலிசா அருங்காட்சியத்தை ஆஸ்திரேலியாவில் அமைக்க திட்டமிடுகிறேன் - ஸ்ரீதர்

    31/05/2024 Duração: 14min

    A.P. Sridhar, an esteemed artist with a prolific career spanning 35 years across the globe, is renowned for his contributions to the art world, particularly in constructing numerous museums. Celebrated as the "Museum Man of India," his paintings evoke a sense of awe and admiration. Sridhar has collaborated with many prominent figures in India, immortalising them through his art. Recently, he visited Sydney with plans to establish a museum in Australia. We had the privilege of conversing with him at the SBS recording studio. Produced by RaySel. Part 1 - உலகெங்கும் 35 ஆண்டுகளாக கலைப்பணி செய்துவரும் A P ஸ்ரீதர் அவர்கள் “இந்தியாவின் அருங்காட்சியக மனிதர் - Museum Man of India” என கொண்டாடப்படுமளவு பல அருங்காட்சியகங்களை நிர்மாணித்தவர். அவரின் ஓவியங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியும், அவர்களை ஓவியங்களாக்கியிருக்கும் மாபெரும் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் திட்டத்துடன் சிட்னி வருகை தந்திருந்தார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து ச

  • Interview with A.P. Sridhar, Museum Man of India – Part 2 - உலகிலேயே வீட்டின் முன் கோலம்போடும் – ஓவியம் தீட்டும் கலாச்சாரம் வேறு எங்கும் இல்லை – ஸ்ரீதர்

    31/05/2024 Duração: 18min

    A.P. Sridhar, an esteemed artist with a prolific career spanning 35 years across the globe, is renowned for his contributions to the art world, particularly in constructing numerous museums. Celebrated as the "Museum Man of India," his paintings evoke a sense of awe and admiration. Sridhar has collaborated with many prominent figures in India, immortalising them through his art. Recently, he visited Sydney with plans to establish a museum in Australia. We had the privilege of conversing with him at the SBS recording studio. Produced by RaySel. Part 2. - உலகெங்கும் 35 ஆண்டுகளாக கலைப்பணி செய்துவரும் A P ஸ்ரீதர் அவர்கள் “இந்தியாவின் அருங்காட்சியக மனிதர் - Museum Man of India” என கொண்டாடப்படுமளவு பல அருங்காட்சியகங்களை நிர்மாணித்தவர். அவரின் ஓவியங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியும், அவர்களை ஓவியங்களாக்கியிருக்கும் மாபெரும் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் திட்டத்துடன் சிட்னி வருகை தந்திருந்தார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து

  • அமெரிக்க அதிபர் ஒருவர் ‘குற்றவாளி’ என முதல்முறையாக நீதி மன்றம் தீர்ப்பு

    31/05/2024 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 31/05/2024) செய்தி.

  • First Nations Australians say 'Now More Than Ever' true reconciliation is needed - Reconciliation week: உண்மையான நல்லிணக்கம் தேவை - பூர்வீகக் குடிமக்கள்

    30/05/2024 Duração: 07min

    This week is Reconciliation week, marking two important dates in Australia's history for First Nations rights. This year's theme is "Now More Than Ever", encouraging Australians to come together to continue the fight for recognition of Aboriginal and Torres Strait Islander people while addressing issues that disproportionately affect their communities. Praba Maheswaran talks to Dushyanthi Thangiah in Townsville who works with and work for First Nations Australians regarding the Reconciliation week. - இந்த வாரம் Reconciliation week - நல்லிணக்க வாரமாகும். இந்த வருடத்தின் கருப்பொருள் "Now More than Ever" என்பதாகும், ஆஸ்திரேலியர்களை ஒன்றிணைந்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தைத் தொடர ஊக்குவிக்கும் அதே வேளையில் அவர்களின் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய நல்லிணக்க வாரம் பயன்படுவதாக நம்பப்படுகிறது. குயின்ஸ்லாந்தில் Townsville நகரில் பல தசாப்தங்களாகப் பூர்வீகக் குடியினருடன் பணியாற்றி அவர்களுக்கு சேவையாற்றிவரும் துஷ்யந்த

  • ஆஸ்திரேலியாவின் முதல் 10 செல்வந்தர்களின் பட்டியல்!

    30/05/2024 Duração: 02min

    ஆஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலை The Australian Financial Review சஞ்சிகை 41வது ஆண்டாக வெளியிட்டுள்ளது.இதன்படி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள செல்வந்தர்கள் யாரென்ற விவரங்களைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கையை குறைப்பது தீர்வாகுமா?

    30/05/2024 Duração: 09min

    நாட்டில் புதிதாக குடியேறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது. புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை தாம் குறைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தாம் பதவிக்கு வந்தால் அரசு கூறும் எண்ணிக்கையைவிட மேலும் அதிகமாக குறைப்போம் என்று எதிர்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் கூறிவருகிறார். இந்த பின்னணியில் புதிய குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. இதில் தனது கருத்தை முன்வைப்பவர் பெர்த் நகரிலிருந்து பாஸ்கர் சத்யமூர்த்தி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

página 1 de 25