Tamil Quran Audio

Informações:

Sinopse

Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.

Episódios

  • அத்தியாயம் : 14 - இப்ராஹீம் - ஓர் இறைத் தூதரின் பெயர்

    10/03/2018 Duração: 31min

    இந்த அத்தியாயத்தில் இப்ராஹீம் நபியவர்கள் கஃஅபாவை புனர்நிர்மாணம் செய்தது 35வது வசனத்திலும், தமது குடும்பத்தினரை இறைவனின் கட்டளைப்படி பாலைவனப் பெருவெளியாக இருந்த மக்காவில் குடியமர்த்திய செய்தி 37வது வசனத்திலும், முதுமையில் அவர்களுக்கு இறைவன் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய குழந்தைகளை வழங்கிய நிகழ்ச்சி 39வது வசனத்திலும் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இப்ராஹீம் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

  • அத்தியாயம் : 13 - அர்ரஃது – இடி

    10/03/2018 Duração: 31min

    இந்த அத்தியாயத்தின் 13வது வசனத்தில் இடியும் இறைவனைத் துதிக்கிறது என்ற சொற்றொடர் இடம் பெறுவதால் இந்த அத்தியாயம் இடி என பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 12 - யூஸுஃப் - ஓர் இறைத் தூதரின் பெயர்

    10/03/2018 Duração: 01h05min

    இந்த அத்தியாயம் முழுவதும் யூஸுஃப் என்ற இறைத்தூதரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ஒரு அத்தியாயத்தில் முழுமையாக ஒருவரது வரலாறு கூறப்படுவது இந்த அத்தியாயத்தில் மட்டும் தான். எனவே இந்த அத்தியாயம் யூஸுஃப் எனப் பெயர்பெற்றது.

  • அத்தியாயம் : 11 - ஹூது - ஓர் இறைத் தூதரின் பெயர்

    10/03/2018 Duração: 01h11min

    இந்த அத்தியாயத்தில் 50வது வசனம் முதல் 60வது வசனம் வரை ஹூது நபி அவர்களுடைய பிரச்சாரமும், அவர்களுடைய சமுதாயத்தினர் அவருக்குக் கொடுத்த இடையூறுகளும், நல்லோர் காப்பாற்றப்பட்டு தீயோர் அழிக்கப்பட்டதும் கூறப்படுகிறது. எனவே இந்த அத்தியாயம் ஹூது எனப் பெயர் பெறுகிறது.

  • அத்தியாயம் : 10 - யூனுஸ் - ஓர் இறைத் தூதரின் பெயர்

    08/03/2018 Duração: 01h08min

    இந்த அத்தியாயத்தில் 98வது வசனத்தில் யூனுஸ் நபியை ஏற்காத மக்கள், இறைவனுடைய தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி ஏகஇறைவனை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி இடம் பெறுவதால் யூனுஸ் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

  • அத்தியாயம் : 9 - அத்தவ்பா - மன்னிப்பு

    08/03/2018 Duração: 01h34min

    117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

  • அத்தியாயம் : 8 - அல் அன்ஃபால் - போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்

    08/03/2018 Duração: 13min

    எதிரிகளிடம் போரில் கைப்பற்றப்படுபவை அன்ஃபால் எனப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அன்ஃபால் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

  • அத்தியாயம் : 7 - அல் அஃராஃப் - தடுப்புச் சுவர் - (7:101-206)

    08/03/2018 Duração: 01h04min

    சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையே அகலமான தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படாத சிலர் அதில் தங்க வைக்கப்படுவார்கள். அந்தத் தடுப்புச் சுவர் தான் அஃராப் எனப்படுகிறது. இது பற்றி இந்த அத்தியாயத்தின் 46, 47, 48, 49 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயம் அஃராப் என்று பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 7 - அல் அஃராஃப் - தடுப்புச் சுவர் - (7:1-100)

    07/03/2018 Duração: 01h03min

    சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையே அகலமான தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படாத சிலர் அதில் தங்க வைக்கப்படுவார்கள். அந்தத் தடுப்புச் சுவர் தான் அஃராப் எனப்படுகிறது. இது பற்றி இந்த அத்தியாயத்தின் 46, 47, 48, 49 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயம் அஃராப் என்று பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 6 - அல் அன்ஆம் - கால்நடைகள் - (6:91-165)

    07/03/2018 Duração: 57min

    கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.

  • அத்தியாயம் : 6 - அல் அன்ஆம் - கால்நடைகள் - (6:1-90)

    07/03/2018 Duração: 55min

    கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.

  • அத்தியாயம் : 5 - அல்மாயிதா – உணவுத் தட்டு - (5:61-120)

    07/03/2018 Duração: 44min

    ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக 112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

  • அத்தியாயம் : 5 - அல்மாயிதா – உணவுத் தட்டு - (5:1-60)

    07/03/2018 Duração: 55min

    ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக 112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

  • அத்தியாயம் : 4 - அன்னிஸா - பெண்கள் - (4:81-176)

    06/03/2018 Duração: 01h05min

    பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது 'பெண்கள்' எனும் பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 4 - அன்னிஸா - பெண்கள் - (4:1-80)

    06/03/2018 Duração: 01h02min

    பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது 'பெண்கள்' எனும் பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 3 - ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்

    06/03/2018 Duração: 02h02min

    இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும், அவரது தாயாரையும், ஈஸா நபியையும் குறிக்கும். இந்த அத்தியாயத்தில் 35, 36, 37 ஆகிய வசனங்களில் இம்ரானின் குடும்பத்தார் பற்றிய முக்கிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே இந்த அத்தியாயம் இம்ரானின் குடும்பத்தினர் எனப் பெயர் பெற்றது.

  • அத்தியாயம் : 2 - அல் பகரா - அந்த மாடு - (2:171-286)

    06/03/2018 Duração: 01h40min

    திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக 'அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது. காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.

  • அத்தியாயம் : 2 - அல் பகரா - அந்த மாடு - (2:1-170)

    06/03/2018 Duração: 01h43min

    திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக 'அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது. காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.

  • அத்தியாயம் : 1 - அல் ஃபாத்திஹா - தோற்றுவாய்

    03/03/2018 Duração: 01min

    அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87

página 6 de 6