Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
அடையாளத் திருட்டு - புகலிடக் கோரிக்கையாளர்களே உஷார் !!!
30/10/2025 Duração: 08minஅடையாள ஆவணத் திருட்டு என்பது ஒரு முக்கியமான குற்றமாக தற்பொழுது பெருகி வருகிறது. இதற்கு குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்கள் பலியாகின்றனர். தனக்கு இப்படியாக நடந்த ஒரு சம்பவத்தை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் ஒரு புகலிடக் கோரிக்கையாளர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
-
“வாலி”பக் கவிஞர்!
30/10/2025 Duração: 08minஎழுத்துக்களை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்தநாள் அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
-
Thunderstorm ஆஸ்துமா தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி?
30/10/2025 Duração: 11minThunderstorm ஆஸ்துமா தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதை நாம் அவதானித்திருப்போம். Thunderstorm ஆஸ்துமா என்றால் என்ன? இதன் தாக்கத்திலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது? இதன் அறிகுறிகள் என்னென்ன என்பது தொடர்பில் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் சர்மிளா சுரேஷ்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
-
How to navigate Australia’s ICT workforce as a skilled migrant - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி?
30/10/2025 Duração: 24minDiscover how skilled migrants navigate challenges in Australia’s ICT sector, from job hunting and local experience to networking and thriving in tech careers. - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) துறையில் பணியாற்றும் திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடல், உள்ளூர் அனுபவம் பெறல் மற்றும் நெட்வொர்க்கிங் செய்து தொழில்துறையில் முன்னேறுவது தொடர்பில் சந்திக்கும் சவால்களை எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.
-
இன்றைய செய்திகள்: 30 அக்டோபர் 2025 வியாழக்கிழமை
30/10/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 30/10/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
சிட்னி மருத்துவமனையில் வாயு விநியோகத்தை துண்டித்த பெண்? நோயாளி மரணம் தொடர்பில் விசாரணை
29/10/2025 Duração: 02minசிட்னியில் உள்ள Sutherland மருத்துவமனையில் ஆண் நோயாளி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் புதிய விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வெளிநாட்டு மண்ணில் ஈழத்தமிழரின் வாழ்வியலும், அடையாளமும்
29/10/2025 Duração: 10minUprooted, Stories from the Sri Lankan Tamil Diaspora என்ற நூல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழ்வியலை ஆழமாக ஆராய்ந்து, அதன் வேரூன்றிய உணர்ச்சியையும் வெளிநாட்டு மண்ணில் புதிய அடையாளங்களைக் கட்டியெழுப்பிய உறுதியையும் சித்தரிக்கும் ஒரு ஆய்வு நூல். அதனை எழுதியிருக்கும் ஆனா பரராஜசிங்கம் அவர்களிடம் அவரது பின்னணி குறித்தும் இந்த நூலை எழுதியதன் நோக்கம் குறித்தும் சிட்னி நகரில் நடைபெற இருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்தும் கேட்டறிந்து கொள்கிறார் றைசெல்.
-
'ஆணுக்கு இணையாக பெண் மிருதங்கம் வாசிப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை'
29/10/2025 Duração: 21minShakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க வருகிறார் பிரபல மிருதங்க வாத்திய கலைஞர் லஷ்மி ராஜசேகர் அவர்கள். அவரது இசைப்பயணம் தொடர்பிலும், ஆஸ்திரேலிய பயணம் தொடர்பிலும் லஷ்மி ராஜசேகர் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 29 அக்டோபர் 2025 புதன்கிழமை
29/10/2025 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 29/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: உங்கள் ஓய்வூதிய நிதி(super) தொடர்பில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எவை?
29/10/2025 Duração: 07minஆஸ்திரேலியாவில் Superannuation பணத்தை திரும்பப்பெறுவதற்கான விதிகளில் நவம்பர் 2 முதல் மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கை: தெற்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன தீர்வு?
28/10/2025 Duração: 07minவடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீர்வுகளின்றி தொடர்கின்றது. இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாள் நிகழ்வு கம்பஹாவில் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டவர்களை நவுருவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கை ஆரம்பம்
28/10/2025 Duração: 02minஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முதல் குழுவை நவுரு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
NSW மாநில சுரங்க வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி!
28/10/2025 Duração: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநில சுரங்க விபத்தில் இருவர் பலியாகினர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 28 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை
28/10/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்
27/10/2025 Duração: 21minதமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் & றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டிருக்கும் நேர்முகத்தின் நிறைவுப்பாகம் இது.
-
திராவிட கட்சிகள் சாதியத்தை, வாரிசு அரசியலை வளர்க்கின்றனவா? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்
27/10/2025 Duração: 21minதமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் மற்றும் றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டிருக்கும் நேர்முகத்தின் முதல் பாகம் இது.
-
செய்தியின் பின்னணி : வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான தீர்ப்பு என்ன சொல்கிறது?
27/10/2025 Duração: 07minWork From Home WFH - வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து Fair Work Commission வழங்கியுள்ள சமீபத்திய தீர்பபு ஒன்று வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்த விவாதத்திற்கு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 27 அக்டோபர் 2025 - திங்கட்கிழமை
27/10/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
26/10/2025 Duração: 09minஆந்திரா பஸ் விபத்தில் 20 பேர் பலி; பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு; தமிழகத்தில் நெல் கொள்முதலில் குளறுபடி என்று எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டும் திமுகவின் விளக்கமும்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (19–25 அக்டோபர் 2025)
24/10/2025 Duração: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (19–25 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.