Sbs Tamil - Sbs

‘சமூக நீதி, ஏழைகளுக்காக குரல் கொடுத்தல், தரமான எழுத்துக்களை மக்களுக்குத் தருதல் என்று என் பயணம் தொடரும்’

Informações:

Sinopse

கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2