Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?
16/10/2025 Duração: 03minபுதிய தரவரிசைப்படி, ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாகத் தொடர்கிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சுகாதாரமான உணவு ஆரோக்கியமான வாழ்வு
16/10/2025 Duração: 08minநமது உடல் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பமாகிறது ஆகவே உணவு தயாரிக்கும் முறைகள் சுகாதாரமானதாக இருப்பது அவசியம். உணவு பாதுகாப்பு குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி
-
உலக சுகாதார நிறுவனம் உருவாக கல் நட்டவன்!
16/10/2025 Duração: 05minஆற்காடு ராமசாமி அவர்கள் தமிழ் மக்கள் மறக்கக் கூடாத ஒருவர். தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்று அரசியல் உரிமை பெறும் போராட்டத்தின் விதை தூவியவர்களில் ஒருவர் ராமசாமி அவர்கள். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
-
சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
16/10/2025 Duração: 18minநமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது நமக்கு வலி தெரியாமல் இருக்க என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? இதன் பக்கவிளைவுகள் எவை? என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : பிரதமரின் மொபைல் எண் இணையத்தில் வெளியானது எப்படி?
16/10/2025 Duração: 07minபிரதமர் Anthony Albanese, எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley, நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிரிஸ் மின்ஸ் உள்ளிட்ட பல பிரபல ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் மொபைல் எண்கள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இணையதளத்தில் வெளிப்படையாகப் பதிவிடப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
தீபாவளித் திருநாள்: பேராசிரியர் ஞானசம்பந்தன் தரும் விளக்கம்
16/10/2025 Duração: 03minதமிழுலகம் நன்கறிந்தவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள். தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர். SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்தில் தீபவாலி குறித்து இப்படி விளக்குகிறார்.
-
How you can work as an engineer in Australia: accreditation, jobs and networking - ஆஸ்திரேலியாவில் பொறியாளராக வேலை செய்வது எப்படி: அங்கீகாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள்
16/10/2025 Duração: 21minAustralia faces an engineering shortage, yet many migrant engineers are underemployed. Learn about qualification recognition, job search tips, CV advice, and networking strategies. - ஆஸ்திரேலியாவில் பொறியியல் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது, ஆனால் பல புலம்பெயர்ந்த பொறியாளர்கள் தகுந்த வேலை வாய்ப்புகளை பெற முடியாமல் உள்ளனர். இந்தப்பின்னணியில் பொறியியல் பணிக்கான தகுதிச் சான்றிதழ் அங்கீகாரம், வேலை தேடல் குறிப்பு, சுயவிவர (CV) ஆலோசனைகள் மற்றும் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கும் முறைகள் குறித்து அறிந்துகொள்வோம்.
-
இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2025 வியாழக்கிழமை
16/10/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
சட்டம்: சமூக பாதுகாப்பில் இளைஞர்கள் காவல்துறையுடன் எப்படி இணைந்து செயற்படலாம்?
15/10/2025 Duração: 14minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் ஆதரவுத்திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரிஅதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் Alex Kwarkernaak ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 2
-
சட்டம்: இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் எவை?
15/10/2025 Duração: 20minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் ஆதரவுத்திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரிஅதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் Alex Kwarkernaak ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 1
-
செய்தியின் பின்னணி: பூர்வீகக்குடிமக்களுடன் விக்டோரியா செய்துகொள்ளவிருக்கும் உடன்படிக்கையில் என்ன உள்ளது?
15/10/2025 Duração: 06minபூர்வீகக்குடிமக்களுடன் முறையான Treaty- உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் விக்டோரிய மாநில அரசு பேச்சு நடத்திவருகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Sydney Lang.
-
இன்றைய செய்திகள்: 15 அக்டோபர் 2025 புதன்கிழமை
15/10/2025 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மலையக மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?
14/10/2025 Duração: 07minஇலங்கையில் வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் மலையக மக்கள் வாழகின்றனர் என்றும், அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு அரசும் வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் நகர்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
நடிகர் விஜயின் கரூர் கூட்ட துயரமும், விசாரணையும், கூட்டணியும்
14/10/2025 Duração: 09minநடிகர் விஜயின் கரூர் கூட்ட துயரத்தைத் தொடர்ந்து விசாரணையும், கூடவே கூட்டணி பேச்சுக்களும் எழுந்துள்ளன. விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு அழைக்கிறது அதிமுக. இது பற்றிய விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 14 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை
14/10/2025 Duração: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
அகதியிலிருந்து Cairns நகரில் பிறருக்கு வேலை தரும் நிலைக்கு உயர்ந்தது எப்படி?
13/10/2025 Duração: 10minகுயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் சிவா அவர்களை சந்தித்தோம். அகதி பின்னணியிலிருந்து ஒரு சமூக சேவை நிறுவன உரிமையாளராக மாறிய கதையையும், Cairns, யாழ்ப்பாண நகரங்களின் சூழல்களையும் ஒப்பிடுகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.
-
மெல்பனில் இந்தியப் பெண் கொலை: பிந்திய தகவல்கள்
13/10/2025 Duração: 02minமெல்பனில் தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் இந்தியப்பின்னணி கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் சிட்னியிலிருந்து Cairnsக்கு குடிபெயர்ந்தேன்? எப்படி Cairns சிறப்பானது?
13/10/2025 Duração: 08minகுயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் பிரணவ் அவர்களை சந்தித்தோம். குடிவரவு வழக்கறிஞராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த கதையையும், Cairns நகரம் எப்படி வாழ்வதற்கு நல்ல தெரிவு என்றும் விளக்குகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.
-
Indigenous sport in Australia: Identity, culture and legacy - விளையாட்டுத்துறையில் அழியாத தடத்தைப் பதித்துள்ள பூர்வீகக்குடி பின்னணிகொண்ட வீரர்கள்!
13/10/2025 Duração: 08minIndigenous Australian athletes have long inspired the nation, uniting communities and shaping our identity. Olympian Kyle Vander-Kuyp and Matildas goalkeeper Lydia Williams are two such Indigenous athletes that have shaped our national identity. Their stories show the power of sport to foster inclusion, equality, and pride for future generations. - ஒரு தேசத்தை ஊக்கப்படுத்த என்ன தேவை? பல ஆஸ்திரேலியர்களுக்கு, இதற்கான பதில் விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடும். கால்பந்து மைதானத்திலிருந்து தடகள அரங்கம் வரை, ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி பின்னணிகொண்ட விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டின் விளையாட்டு வரலாற்றை வடிவமைத்துள்ளனர்.பல கலாச்சாரங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே இணைப்புகளை உருவாக்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
-
ஏன் தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இல்லை?
13/10/2025 Duração: 10min‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 2